Tippu sultan story in tamil
பிரெஞ்சிடம் பயிற்சிப் பெற்று, பிரிட்டிஷுடன் சண்டைக் கட்டிய திப்பு சுல்தான் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!
1 திப்பு சுல்தான்
அவரது வீரம் மற்றும் துணிவு காரணமாக அவர் அறியப்படுகிறார். இந்திய பிரேதசங்களை கைபற்ற முயன்ற பிரிட்டிஷூக்கு எதிராக கடுமையான போர் புரிந்த இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரராக திப்பு சுல்தான் பார்க்கப்படுகிறார்.
ஆங்கிலோ- மைசூர் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடன் மங்களூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஒரு இந்திய மன்னர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு விதிமுறை விதித்தது அன்றுதான் முதல்முறை.
மைசூரை சேர்ந்த சுல்தான் ஹைதர் அலியின் மூத்த மகனான திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டு தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு அரியணை ஏறினார். ஆட்சியாளராக அவர் தனது அதிகாரத்தின் கீழ் பல புதுமைகளை செயல்ப்படுத்தினார்.
2 திப்பு போர் யுக்தி
மேலும் அவர் இரும்பால் ஆன மைசூர் ராக்கெட்டுகளை உருவாக்கினார்.
அவற்றை அவர் போர்களில் பயன்படுத்தினார். திப்பு சுல்தானின் தந்தையான ஹைதர் அலி பிரெஞ்சுக்காரர்களுடன் அரசியல் உறவை கொண்டிருந்தார். இது கிழக்கிந்திய கம்பெனியின் வளர்ச்சியை அதிகமாக பாதித்தது.
இதனால் திப்பு சுல்தான் இளைஞனாக ஆன பிறகு பிரெஞ்சு அதிகாரிகளிடம் ராணுவ பயிற்சியை பெற்றார். ஆட்சியாளராக ஆன பிறகு தனது தந்தையை போலவே ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் அவர் பிரெஞ்சுகாரர்களுடன் இணைந்து போராடினார்.
அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார்.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியிடம் தனது தேசம் சிக்காமல் இருக்க பல முயற்சிகளை திப்பு செய்து வந்தார்.
கடைசி வரை நாட்டுக்காக போராடிய அவர் நான்காம் ஆங்கிலோ- மைசூர் போரில் சண்டையிட்டு மரணம் அடைந்தார்.
3 குழந்தைபருவமும் வாழ்க்கையும்
திப்பு சுல்தான் 1750 நவம்பர் 20 அன்று இன்றைய பெங்ளூரில் ஹைதர் அலி என்பவருக்கு மகனாக பிறந்தார்.
Asia uncut lin peng biographyதென்னிந்தியாவில் உள்ள மைசூர் ராஜ்ஜியத்தில் இராணுவ அதிகாரியாக ஹைதர் அலி இருந்தார். அவர் விரைவாகவே தனது அதிகாரித்தில் பதவி உயர்வு பெற்றார். 1761 ஆம் ஆண்டு மைசூர் ராஜ்ஜியத்தின் ஆட்சியளராக ஹைதர் அலி ஆனார்.
கல்வியறிவு இல்லாமல் இருந்த ஹைதர் அலி தனது மூத்த மகனுக்கு இளவரசன் ஆவதற்கான நல்ல கல்வியை கொடுப்பதில் குறிக்கோளுடன் இருந்தார். திப்பு சுல்தான் இந்துஸ்தான் மொழி (இந்தி- உருது), பாரசீகம், அரபு, கன்னடம், குர் ஆன், குதிரை சவாரி, துப்பாக்கி சுடுதல் முதலியவற்றை கற்றார்.
4 பிரஞ்சு காரர்களுடனான உறவு
அவரது தந்தை பிரெஞ்சுக்காரர்களுடன் அரசியல் உறவை கொண்டிருந்தார்.
இதனால் திப்பு சுல்தான் பிரெஞ்சு அதிகாரிகள் மூலம் இராணுவம் மற்றும் அரசியல் பயிற்சி பெற்றார். 1766 ஆம் ஆண்டு அவர் தனது தந்தையுடன் ஆங்கிலேயருக்கு எதிரான தனது முதல் போருக்கு சென்றார். அப்போது அவருக்கு வயது வெறும் 15 தான்.
சில ஆண்டுகளில் ஹைதர் அலி முழு தென்னிந்தியாவிலும் மிக சக்தி வாய்ந்த ஆட்சியாளராக மாறியிருந்தார். மேலும் அவரது ராணுவத்தில் திப்பு சுல்தானுக்கு முக்கிய பங்கு இருந்தது.
5 ஆட்சி மற்றும் அதிகாரம்
1799 ஆம் ஆண்டு திப்புவின் பாதுகாப்பின் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த மஹே துறைமுகத்தை ஆங்கிலேயர்கள் கைபற்றினர்.
1780 ஆம் ஆண்டு ஹைதர் அலி ஆங்கிலேயர்களுக்கு எதிராக தனது விரோத போக்கை காட்ட துவங்கினார்.
மேலும் இரண்டாம் ஆங்கிலோ- மைசூர் போரின் ஆரம்பக்காலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றார். ஆனால் போரில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்த சமயத்தில் துர்திருஷ்டவசமாக ஹைதர் அலி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1782 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இறந்தார்.
ஹைதர் அலியின் மரணத்தை தொடர்ந்து 22 டிசம்பர் 1782 அன்று திப்பு சுல்தான் மைசூரின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு இராணுவத்தை திரட்ட அவர் முடிவு செய்தார்.
எனவே மராட்டியர்களுடனும் முகலாயர்களுடனும் அவர் கூட்டணியை ஏற்படுத்தினார். இறுதியில் 1784 இல் ஆங்கிலேயர்களுடன் மங்களூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அந்த போரில் திப்புசுல்தான் வெற்றி பெற்றார்.
6 இரண்டாம் மைசூர் போர் முடிவு
இரண்டாம் மைசூர் போர் முடிவுக்கு வந்தது.
ஒரு ஆட்சியாளராக திப்பு சுல்தான் எவ்வளவு திறமையானவர் என்பதை நிரூபித்தார். அவர் தனது தந்தையின் கனவு திட்டங்களை நிறைவேற்றினார். சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள், துறைமுகங்கள், போன்றவற்றை கட்டினார்.
மேலும் இவர் போர்களில் ராக்கெட்டுகளை பயன்படுத்தினார். ஏராளமான இராணுவ ஆயுதங்களை கண்டுப்பிடித்தார். அது பிரிட்டிஷ் படைகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.
பிறகு அவர் தனது எல்லைகளை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.
அவர் திருவிதாங்கூர் மீது கவனம் செலுத்தினார். ஆனால் மங்களூர் ஒப்பந்தத்தின் படி அந்த இடம் கிழக்கிந்திய கம்பெனியின் கூட்டணியில் இருந்தது.
7 திருவாங்கூர் தாக்குதல்
1789 இல் திப்பு சுல்தான் திருவாதங்கூர் வழிகளில் தாக்குதல் நடத்தினார். ஆனால் இதனால் அவர் திருவிதாங்கூர் மகாராஜாவின் இராணுவத்திடன் எதிர்ப்பை எதிர்க்கொண்டார்.
இந்த நிகழ்வு மூன்றாம் ஆங்கிலோ- மைசூர் போர் தொடங்க காரணமானது.
திப்பு சுல்தானின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாத திருவிதாங்கூர் மகாராஜா கிழக்கிந்திய கம்பெனியிடம் உதவி கேட்டார். இதற்காக கார்ன்வாலிஸ் பிரபு என்னும் ஆங்கிலேயர் திப்புவை எதிர்ப்பதற்காக மராட்டியர்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாமுடன் கூட்டணிகளை உருவாக்கி ஒரு வலுவான இராணுவ சக்தியை உருவாக்கினார்.
8 கோவை போர்
கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் 1790 இல் திப்பு சுல்தானை தாக்கி விரைவில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் பெரும்பகுதியை கைப்பற்றின.
பிறகு திப்பு எதிர் தாக்குதல் நடத்தினார். ஆனால் அவரது தாக்குதல் அவ்வளவு வெற்றியடையவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நடந்தது. 1792 இல் திப்பு செரிங்கப்பட்டம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரே இந்த போர் முடிவடைந்தது.
Prue leith life story templateஇதன் விளைவாக திப்பு மலபார் மற்றும் மங்களூர் உள்ளிட்ட பல தேசங்களை இழந்தார்.
அவர் தனது தேசங்களை இழந்திருந்தாலும் அவருடைய தைரியம் காரணமாக திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தார். இதனால் கிழக்கிந்திய கம்பெனி மீண்டும் 1799 ஆம் ஆண்டில் மராட்டியர்கள் மற்றும் நிஜாமுடன் மீண்டும் கூட்டணி வைத்து நான்காவது ஆங்கிலோ- மைசூர் போரை துவங்கின.
இந்த போரில் அவர்கள் மைசூரை தாக்கி அதன் தலைநகரமான ஶ்ரீரங்கபட்டணத்தை கைபற்றினர்.
அந்த போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.
9 முக்கிய போர்கள்
திப்பு சுல்தான் ஒரு துணிச்சலான போர்வீரர் ஆவார். இரண்டாவது ஆங்கிலோ- மைசூர் போரில் அவர் தனது திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போராட அவரது தந்தையால் அனுப்பப்பட்ட திப்பு சுல்தான் ஆரம்பக்கால போர்களிலேயே மிகவும் தைரியமாக போராடினார்.
அவரது தந்தை போரின் நடுவில் இறந்தார்.
அதன்பிறகு 1782 இல் மைசூரின் ஆட்சியாளராக பதவியேற்ற திப்பு சுல்தான் மங்களூர் ஒப்பந்தம் மூலமாக போரை வெற்றிக்கரமாக முடித்து வைத்தார்.
மூன்றாம் ஆங்கிலோ- மைசூர் போர் என்பது திப்பு சுல்தான் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக மேற்கொண்ட மிகப்பெரிய போராகும். ஆனால் அந்த போர் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.
செரிங்கப்பட்டம் என்னும் உடன்படிக்கை மூலம் அந்த போர் முடிவுக்கு வந்தது.
செரிங்கப்பட்டம் உடன்படிக்கைப்படி திப்பு சுல்தான் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும், ஹைதராபாத் நிஜாமிற்கும் மற்றும் மஹாராத்தா பேரரசின் பிரதிநிதிகளுக்கும் தனது ஆட்சி பகுதியில் பெரும்பகுதியை விட்டு கொடுக்க வேண்டியிருந்தது.
10 தனிப்பட்ட வாழ்க்கை
திப்பு சுல்தானுக்கு ஹாஜதா ஹைதர் அலி சுல்தான், ஹாஜதா அப்துல் கலிக் சுல்தான், ஹாஜதா முஹி உத் தின் சுல்தான் மற்றும் ஹாஜதா உத் தின் சுல்தான் உட்பட பல மனைவிகளும் ஏராளமான குழந்தைகளும் இருந்தனர்.
ஒரு துணிச்சலான போர் வீரனாக நான்காம் ஆங்கிலோ- மைசூர் போரில் பிரிட்டிஷ் படைகளுடன் போராடியபோது 1799 மே 4 அன்று அவர் இறந்தார்.
காலணித்துவ ஆங்கிலேயருக்கு எதிராக தனது ராஜ்ஜியத்தை காப்பதற்காக போராடிய போர்களத்தில் இறந்த முதல் இந்திய அரசர் திப்பு சுல்தான்தான்.
இதனால் இந்திய அரசால் அவர் சுதந்திர போராட்ட வீரராக அறிவிக்கப்பட்டார். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பல பிராந்தியங்களில் ஒரு கதாநாயகனாக இவர் பார்க்கப்படுகிறார். ஆனால் இந்தியாவில் சிலர் இவரை கொங்கோலான ஆட்சி புரிந்தவர் என்றும் கூறுகின்றனர்.
11 திப்பு சுல்தான் பெருமைகள்
பிரிட்டிஷ் ராணுவத்தின் தேசிய ராணுவ அருங்காட்சியகத்தில் பிரிட்டிஷ் ராணுவம் இதுவரை சந்தித்ததிலேயே அவர்களின் மிகப்பெரிய பலம் வாய்ந்த எதிரியாக திப்பு சுல்தானை மதிப்பிட்டுள்ளனர்.
திப்பு சுல்தான் பொதுவாக மைசூர் புலி என்று அழைக்கப்படுகிறார்.
ஏனெனில் அவர் புலியை தனது ஆட்சியின் அடையாள சின்னமாக கொண்டிருந்தாராம்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியும் ஆன ஏ.பி.ஜே அப்துல்கலாம் திப்பு சுல்தான் குறித்து கூறும்போது, முதல் உலகபோரில் பயன்படுத்திய ராக்கெட்டின் கண்டுப்பிடிப்பாளர் திப்பு சுல்தான் என கூறினார்.
இப்படியாக இந்திய மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிரான தனது முதல் குரலை அழுத்தமாக வரலாற்றில் பதிவு செய்து சென்ற இந்தியாவின் முக்கிய தேசிய வீரராக மைசூர் மாகாணத்தின் மன்னர் திப்பு சுல்தான் பார்க்கப்படுகிறார்.